For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஆட்சிக்கு யார் வர வேண்டும் என்பது மக்கள் கையில் தான் உள்ளது" | தவெக முதல் மாநில மாநாட்டிற்கும் #EPS வாழ்த்து!

01:54 PM Oct 22, 2024 IST | Web Editor
 ஆட்சிக்கு யார் வர வேண்டும் என்பது மக்கள் கையில் தான் உள்ளது    தவெக முதல் மாநில மாநாட்டிற்கும்   eps வாழ்த்து
Advertisement

ஆட்சிக்கு யார் வர வேண்டும் என்பது மக்கள் கையில் தான் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Advertisement

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய, பேரூர் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசி எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :

"திமுக ஆட்சியின் ஒரு துறையில் மட்டுமல்ல, பெரும்பான்மையான துறையில் உள்ள அமைச்சர்கள் மிகப் பெரிய ஊழல் செய்துள்ளனர். இதெல்லாம் 2026 அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நாட்டு மக்களுக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும். திமுக ஆட்சியில் கொஞ்சம் பெய்த மழைக்கே தாக்கு பிடிக்க முடியவில்லை. தற்போது வரை புயல் வரவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்னை மாநகரில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காமல் வடிகால் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்கள். 98 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என்று கூறினார்கள். வெள்ள தடுப்பு பணிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற உண்மை மக்களுக்கு தெரிந்துவிட்டது.

திமுக கூட்டணி வலிமையாக உள்ளது என்று கூறுகிறார்களே? கம்யூனிஸ்ட் கட்சி என்ன ஆனது?காங்கிரஸ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்ளிட்டவைகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் திமுக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் உள்ளனர். அவர்களும் எச்சரிக்கை மணி அடித்து வருகிறார்கள். அந்த கூட்டணிகள் இருக்குமா? இருக்காதா? என்று பொருத்திருந்து பார்ப்போம். சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பான கூட்டணி அதிமுக அமைக்கும் பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெறுவோம்.

இதையும் படியுங்கள் : லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுண்ட்டர் செய்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் – க்ஷத்ரிய கர்னி சேனா அறிவிப்பு!

நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மக்களுக்கு விஜய்யும் பொதுசேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் அதன் விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள். ஒவ்வொரு அரசியல் கட்சியும் கனவு கண்டு கொண்டிருக்கிறது எல்லாம் அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் அனைவரின் விருப்பம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களுடைய கையில் தான் உள்ளது"

Tags :
Advertisement