For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

11:46 AM Feb 19, 2024 IST | Web Editor
சிங்காரச் சென்னை 2 0 திட்டத்திற்கு ரூ 500 கோடி   நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
Advertisement

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அவரை சந்தித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து பெற்றார். அதன்பின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் காட்சிக்கு எளிமையும்,  கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார்.

தொடர்ந்து உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,

  • சிங்காரச் சென்னை 2.0 - ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
  • பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் அதி நவீன திரைப்பட நகரம்
  • சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ நீட்டிக்க ரூ.4625 கோடி மதிப்பில் பெறப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
  • சென்னை மெட்ரோ ரயில் சேவைக்காக ரூ. 12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
  • வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு
  • மேலும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை தீவுத்திடல் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்.
  • சென்னை பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட கடற்கரைகள் மேம்படுத்தப்படும்  என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

Tags :
Advertisement