For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை | முதலமைச்சர் #MKStalin தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

12:26 PM Oct 14, 2024 IST | Web Editor
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை   முதலமைச்சர்  mkstalin தலைமையில் ஆய்வுக்கூட்டம்
Advertisement

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

Advertisement

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை உருவானது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனிடையே பருவமழைய எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியில் பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : “ரத்தன் டாடாவுக்கும் தனக்குமான நட்பு” | முதன்முறையாக மனம் திறந்தார் #N.Chandrasekaran!

மேலும் மண்டலக் கண்காணிப்பு அலுவலர், மண்டல அலுவலர், செயற் பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள் நியமனங்களும் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement