Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை வெள்ள பாதிப்பு | செல்லூர் கண்மாயில் சிமென்ட் கால்வாய் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் #MKStalin உத்தரவு!

02:15 PM Oct 30, 2024 IST | Web Editor
Advertisement

மதுரையில் வெள்ளபாதிப்பு குறித்து ஆலோசனை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற ரூ. 11.9 கோடி மதிப்பீட்டில் பணிகள் உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மதுரையில் வெள்ளபாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள் : “தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” – #EPS புகழாரம்!

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது மதுரையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதி மீண்டும் அவ்வாறு நேராதிருக்க உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணியாக 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்கவேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேறுவதற்கு சிமெண்ட் கால்வாய் 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட உத்தரவிட்டார். இதன்மூலம் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CMOTamilNaduMaduraiMKStalinNews7Tamilnews7TamilUpdatesRainTamilNadu
Advertisement
Next Article