ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சோகம்.. வீடியோ வைரல்!
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரி பகுதியைச் சேர்ந்தவர் துஷார் (22). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ரயில்வே கிராசிங்கிற்கு வந்தார். ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தும், அவர் சற்றும் யோசிக்காமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த அவரது இருசக்கர வாகனம் தண்டவாளத்தில் சறுக்கியது.
இதையும் படியுங்கள்: வசூலில் மிரட்டும் ‘லோகா’ திரைப்படம்.. எத்தனை கோடி வசூல் தெரியுமா?
இதில் அவர் தனது இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். உடனடியாக எழுந்த அவர் தனது இருசக்கர வாகனத்தை தூக்க முயன்றார். அப்போது ரயில் வருவதை கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்த ஓடி தப்ப முயன்றார். ஆனால், அதற்குள் வேகமாக வந்த ரயில் அவரை பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் இருசக்கர வாகனத்தில் வருவதும், ரயில் அவரை மோதுவதும் பதிவாகியுள்ளது. ஆனால், அவர் ரயில் கேட்டின் அடியில் புகுந்து வந்தாரா? என்பது வீடியோவில் பதிவாகவில்லை.