#Tamilnadu-வில் நிபா மற்றும் குரங்கு அம்மை தாக்கம் இல்லை - சுகாதாரதுறை இயக்குநர் செல்வவிநாயகம் பேட்டி!
தமிழ்நாட்டில் நிபா மற்றும் குரங்கு அம்மை தாக்கம் இல்லை என சுகாதாரதுறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்தநோய், தற்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் துபாயில் இருந்து திருப்பிய அவருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியாகியுள்ளது.இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்த தொற்று நோயை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் : இந்தியாவில் தொடங்கியது #iPhone16 விற்பனை | நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்ற மக்கள்!
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் தமிழ்நாடு சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது :
"தமிழ்நாட்டில் நிபா மற்றும் குரங்கு அம்மை தாக்கம் இல்லை. பரவாமல் இருக்க மாவட்ட எல்லையோரம், விமான நிலையம், களபணியாளர் என ஐந்து வழிகளில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த தொற்றுக்கள் பரவ கூடுதல் வாய்ப்பு உள்ளன. இதனால், தீவிரமாக பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். பரிசோதனை மேற்கொள்ளும் போது மக்கள் ஒத்துழைப்பு கொடுங்கள். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சுகாதார நிலையங்கள் உடனே அணுகுங்கள். தேவை இல்லமால் பயணத்தை தவிருங்கள்"
இவ்வாறு அவர் தெரிவத்தார்.