For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு... தூத்துக்குடியில் உணவின்றி தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட முதியோர்கள் - உதவி வேண்டி கோரிக்கை!

03:16 PM Dec 19, 2023 IST | Web Editor
தமிழ்நாடு அரசு கவனத்திற்கு    தூத்துக்குடியில் உணவின்றி தவிக்கும் 30 க்கும் மேற்பட்ட முதியோர்கள்   உதவி வேண்டி கோரிக்கை
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில், முதியோர் இல்லத்தில் 30க்கும் மேற்பட்ட முதியோர்கள் உணவின்றி தவிப்பதாகவும், அவர்களுகு உதவுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை முழுவதுமாக வெள்ளநீரில் சூழப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஜேசிபி வாகனத்தில் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றாலும் அனைத்து மக்களுக்கும் இன்னும் உதவிகள் சென்று சேராத நிலையே நீடிக்கிறது. 

இந்நிலையில் புதிய நேசக் கரங்கள் முதியோர் இல்லத்தில் 30க்கும் மேற்பட்ட முதியோர்கள் உணவின்றி தவிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் முகவரி:

டிஎம்பி காலனி, மையவாடி பின்புறம், தூத்துக்குடி. 9894160972

அதேபோல், தூத்துக்குடி, எண் 23-M, அண்ணாநகர் 2வது தெருவில் (பத்ரகாளி அம்மன் கோயில் தெரு) இரண்டு குடும்பங்கள் மாடியில் குழந்தைகளுடன் சாப்பாடு இன்றி தவிக்கிறார்கள் எனவும், அவர்களுக்கு உணவு கிடைக்க உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags :
Advertisement