"தமிழ்நாட்டில் தாமரை எங்காவது மலர்ந்தால் தானே டென்ஷனாக வேண்டும்" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
தமிழ்நாட்டில் தாமரை எங்காவது மலர்ந்தால் தானே டென்ஷனாக வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவிற்கான
பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது. இந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பந்தக்காலை ஊன்றினார். மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
திமுக ஆட்சிக்குப் பிறகு இதுவரை ஆண்டு கணக்கில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிவுற்று திருப்பணிகள் முடிவுறாத திருக்கோயில்களுக்கு தெப்ப குளங்களை சீரமைப்பது, புதிய திருத்தேர்தல் வடிவமைத்தல், பழைய தேர்களை புதுப்பித்தல், வணிக வளாகங்கள், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்ற கொட்டகை கட்டடம் ஆய்வுக் கூட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் 13 வகையான திருவிழாக்களுக்கு
கூடுதலான அடிப்படை தேவைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு கூடுகின்ற
திருவிழாக்களில் முன்கூட்டியே கூடுகின்ற பக்தர்களுக்கு ஏற்ப போக்குவரத்து
வசதி, மருத்துவ வசதி, தங்குமிடம் வசதி, கழிப்பிட வசதி, பாதுகாக்கப்பட்ட
குடிநீர் பல்வேறு சிறப்பு அம்சங்களோடு திருவிழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு
ஆய்வுக் கூட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தீபத்திருவிழா அடுத்த மாதம் 13 என்றாலும் முன்கூட்டியே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீப திருவிழா ஏற்பாடுகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம்.திருவிழாக்களுக்கு முன்பாகவே தேவைப்படுகின்ற அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்வதற்கு ஒருங்கிணைந்த அனைத்து துறை சார்ந்த கூட்டம் தேவை என்பதால் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : GoldRate | மீண்டும் எகிறிய தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
இந்த கங்காதரேசுவரர் கோயில் 2008ம் ஆண்டு முதலில் குடமுழுக்கு நடைபெற்றது. 900 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த திருக்கோயில் சுமார் 4 கோடி 85 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதில் திருக்கோயில்களின் 14 பணிகளுக்கு 2 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சிலை திருட்டு என்பது வெகுவாக குறைந்துள்ளது. ரூ. 28 கோடி சிலை கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டதுள்ளது.
பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் கூண்டோடு ஓரம் கட்டி விட்டோம். எங்களுக்கு
டென்ஷன் இல்லை. நாலு கால் பாய்ச்சலில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த திமுக
எட்டு காலு பாய்ச்சலோடு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், மாவட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை
உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள்
குறைகளையும் மக்கள் தேவைகள் நேரடியாக சந்தித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலில் 200 அல்ல 234 என்ற இலக்கை நோக்கி திமுக பயணத்தைக்
மேற்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு டென்ஷன் அல்ல எங்களுக்கு எதிர்த்து
களத்தில் இருப்பவர்கள் தான் டென்ஷன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.