For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“விஜய் பற்றி எதுவும் பேச வேண்டாம்” - #DMK தலைமை அறிவுறுத்தல்!

02:01 PM Oct 28, 2024 IST | Web Editor
“விஜய் பற்றி எதுவும் பேச வேண்டாம்”    dmk தலைமை அறிவுறுத்தல்
Advertisement

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் திமுக குறித்து விமர்சனம் செய்திருந்த நிலையில், விஜய் பற்றி எதுவும் பேச வேண்டாம் என திமுகவினருக்கு தலைமை அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவது, சமூக வலைதளத்தை கண்காணிப்பது, தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “இந்தியாவில் பயணிகள் விமானங்களும் விரைவில் தயாரிக்கப்படும்” – குஜராத்தில் #PMModi பேச்சு!

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பார்வையாளர்களுக்கு பூத் கமிட்டிகளுக்கான பணிகள், தொகுதி பிரச்னைகள், நலத்திட்டங்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளை சென்றடைந்துள்ளதா? மக்களின் கோரிக்கைகள், மேலும் கட்சி ரீதியாக தொகுதி பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கயிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, துணை முதலமைச்சர் உதயநிதி தலைமையில், தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் திமுக குறித்து விமர்சனம் செய்திருந்த நிலையில், விஜய் பற்றி எதுவும் பேச வேண்டாம் என திமுகவினருக்கு தலைமை அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளனர். எந்த பிரச்னை பற்றியும் கவலைப்படாமல் பணிகளை மேற்கொள்ளவும், மற்றவற்றை தலைமை பார்த்துக் கொள்ளும் என்று அறிவுறுத்தியதாகவும் திமுக சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tags :
Advertisement