For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் - துணை முதலமைச்சர் அறிவிப்பு வெளியாகுமா?

08:06 AM Aug 13, 2024 IST | Web Editor
இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்   துணை முதலமைச்சர் அறிவிப்பு வெளியாகுமா
Advertisement

இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்  நடைபெற உள்ள நிலையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று  ( ஆகஸ்ட் 13ம் தேதி ) நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு கூகுள் நிறுவனத்தின் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை  உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும் தமழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் பணிகளை வேகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

முதலமைச்சர் மு க ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில்  இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில்  இதுகுறித்து முடிவுகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இதையும் படியுங்கள் : ‘எருமை முதல் தங்க கிரீடம் வரை’… ஈட்டி வாங்க காசில்லாது தவித்த அர்ஷத் நதீம் பரிசு மழையில் நனைகிறார்!

சமீபத்தில் அமைச்சர்கள் ராஜா கண்ணப்பன், கீதா ஜீவன் ஆகியோர் இனி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என அழைப்போம் என்கிற ரீதியில் பொதுமேடைகளில் பேசியிருந்த நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

Tags :
Advertisement