For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிலிண்டர் முன்பதிவு இணையதள சேவையில் நீக்கப்பட்ட தமிழ்... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...

05:01 PM Nov 04, 2023 IST | Web Editor
சிலிண்டர் முன்பதிவு இணையதள சேவையில் நீக்கப்பட்ட தமிழ்    வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
Advertisement

இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு இணைய தள சேவையில் தமிழ் மொழி நீக்கப்பட்டு இந்தி  மற்றும் ஆங்கிலம் மட்டும் இடம்பெற்றுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Advertisement

இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு இணைய தள சேவையில் தமிழ் மொழி நிறுத்தப்பட்டு ஹிந்தி மொழி மட்டும் இடம்பெற்றுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடசேன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு இணைய தள சேவையில் தமிழ், ஆங்கிலத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதனால் பதிவு செய்யப் போகிற மக்கள் என்னவென்றே புரியாமல் திகைத்து நிற்கிறார்கள். 'சமையல் எரிவாயு வேண்டும் என்றால் இந்தி கற்றுக் கொண்டு வா' என்று மக்களை துரத்துவது போல உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியுமா? அதில் இந்திய மாநிலங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? இல்லை தெரிந்தே மீறுகிறார்களா? விதிகளை மீறுவதற்கு தைரியம் அளித்து உத்தரவிட்டது யார்? அமைச்சக மட்டத்தில் இருந்து நிர்ப்பந்தமா? இதற்கு உடனே நடவடிக்கை தேவை.

மேலும், உடனடியாக மீண்டும் இன்டேன் சமையல் எரிவாயு இணையதள பதிவு தமிழில் சேவையை தர வேண்டும்" இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

Tags :
Advertisement