Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்திப்பு!

09:55 PM Feb 02, 2024 IST | Web Editor
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்தித்து பேசியுள்ளார். 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளன.  மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.

மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும்  மக்களவைத்  தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.  இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்தித்து பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  நடிகர் சிம்புவின் பிறந்தநாள்… போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன்!

இந்த சந்திப்பு இன்று (பிப்.02) சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  மேலும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.   தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என கடந்த நவம்பர் மாதம் ஜி.கே வாசன் தெரிவித்திருந்தார்.  சமீபத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை ஜி.கே வாசன் விமான நிலையத்தில் சென்று வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் உடனான சந்திப்பு தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக-வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா என கேள்வியை எழுப்பியுள்ளது.

Tags :
ADMKAIADMKEdappadi palanisamyEPSGKVasanParliament ElectionTMC
Advertisement
Next Article