For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணா லைஃப் பிரைட்டா இருக்கும்... - மேக்ஸ்வெல்லுக்கு குவிந்த வித்தியாசமான பாராட்டு...!

10:50 PM Nov 10, 2023 IST | Jeni
தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணா லைஃப் பிரைட்டா இருக்கும்      மேக்ஸ்வெல்லுக்கு குவிந்த வித்தியாசமான பாராட்டு
Advertisement

தமிழ் பெண்களை திருமணம் செஞ்சுகிட்டா லைஃப் பிரைட்டா இருக்கும்... தமிழ்நாட்டின் மருமகன் மேக்ஸ்வெல்லுக்கு குவிந்த வித்தியாசமான பாராட்டுகள்...

Advertisement

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சரவெடி ஆட்டத்துக்கு பிறகு, மேக்ஸ்வெல்லுக்கு தமிழ் மக்களோட பாராட்டு ரொம்பவும் வித்தியாசமான ஒன்றாக இருந்ததை யாராவது நோட் பண்ணுனீங்களா? கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு தான் அது.... ஆமா, கிளென் மேக்ஸ்வெல் இப்பதான் தமிழ்நாட்டு மருமகனாச்சே..

கடந்த வருடம் மார்ச் மாதம் கிளென் மேக்ஸ்வெல்லுக்கும், சென்னையை வம்சாவளியாக கொண்ட வினி ராமனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் ஆனதில் இருந்தே, அவர் தமிழ்நாட்டோட மருமகன் ஆகிட்டாரு... அதனால தான், மேக்ஸ்வெல்லோட அதிரடி இன்னிங்ஸ்க்கு பிறகு தமிழ்நாட்டு பெண்கள கட்டிகிட்டா லைஃப் எவ்வளவு பிரகாசமா இருக்கும்னு பாருங்க அப்படின்னு, தமிழ் பெண்கள் சிலரோட சமூக வலைதள பதிவுகள் அங்கங்க ட்ரெண்ட் ஆச்சு...

மேக்ஸ்வெல்லோட மனைவி வினி ராமன் மருந்தாளுநர் பட்டம் பெற்றவங்க, அதாவது ஃபார்மசிஸ்ட். மேக்ஸ்வெல்ல முதல் முறையா, 2013-ல ஸ்டார்ஸ் ஆஃப் மெல்போர்ன் நிகழ்ச்சியில சந்திச்சிருக்காங்க வினி ராமன். அப்போ தான் இரண்டு பேருக்குள்ளேயும் நட்பு உருவாகியிருக்கு. ரொம்ப வருடமா இது தொடர்ந்துட்டு வந்த நிலையில், வினி ராமன் தன்னோட சமூக வளைதள பக்கத்தில், 2017 ஆம் ஆண்டு முதல் முறையா, மேக்ஸ்வெல்லோட இருக்கிற புகைப்படத்த பதிவிடுறாங்க. அந்த புகைப்படத்தால் தான் வினி மேக்ஸியோட காதலினு பெருசா பேசப்பட்டுச்சு. 2018-ல இருந்து தொடர்ந்து போஸ்டுகளை பதிவு பண்ணிட்டு வந்த வினி ராமன், மேக்ஸ்வெல்லோட நெருக்கமான அடுத்தடுத்து புகைப்படங்களை போஸ்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.

கிட்டத்தட்ட கிளென் மேக்ஸ்வெல்லோட காதலி தான் இவங்கன்னு பெரிய அளவில் பேசப்பட்ட நேரம், 2019 ஆஸ்திரேலியன் கிரிக்கெட் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் மேக்ஸியோட கலந்துகிட்ட வினி, பப்ளிக்கா நாங்க லவ்வர்ஸ்னு சொல்லாம சொன்னாங்க. பாரிஸ்க்கு மேக்ஸ்வெல்லோட ட்ரிப் போன வினி, ஒரே ரொமான்ஸ் போஸ்டுகளா அப்டேட் பண்ண, அதுவும் சூப்பர் டூப்பர் ட்ரெண்ட் ஆனது. அதற்கு பிறகு 2020 ஆஸ்திரேலியன் கிரிக்கெட் அவர்ட்ஸ் நிகழ்ச்சியிலும் இரண்டுபேரும் ஒன்னா பங்கேற்றாங்க.

எப்போதான் இவங்க காதலை வெளிப்படுத்துவாங்கான்னு நினைச்சுட்டு இருந்த போது, வினி ராமன் தன்னோட கையில் மோதிரத்தோட போஸ் கொடுத்திருக்கும் போஸ்ட்டை கிளென் மேக்ஸ்வெல் தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தாரு...  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு தமிழ் பெண்ணுடன் காதல் - இதுதான் வைரலாச்சு. அதுமட்டும் இல்லாம, வினியுனைடைய பிறந்தநாள் அன்னைக்கு தன்னோட இன்ஸ்டா பக்கத்தில் ”ஹேப்பி பர்த்திடே ஃபியான்ஸின்னு” பதிவிட்டிருந்த மேக்ஸ்வெல், இன்னொரு முறை வினி கையில மோதிரம் போட்ட தினத்தை 1 வருஷம் கழிச்சு வாழ்த்து தெரிவிச்சும் பதிவிட்டிருந்தாரு.

ஒருவழியா 2022-ல இவங்க திருமணம் ஆஸ்திரேலியாவுல நடந்து முடிஞ்சது. அந்த நேரத்தில தமிழ் பாரம்பரிய முறைப்படி வடிவமைச்சிருந்த திருமண பத்திரிக்கை  தமிழ்நாட்டில இன்னுமே வைரலாச்சு.  கடந்த அக்டோபர் மாதம் தான் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.  குழந்தைக்கு லோகன் மெவ்ரிக் மேக்ஸ்வெல்ன்னு பெயர் சூட்டினாங்க தம்பதி.

சமீபத்தில நடந்த Worldcup ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுன்னு இருந்தப்போ, மேக்ஸ்வெல்லினுடைய அபாரமான ஆட்டம் தீயா இருந்திச்சு. 128 பந்துகளில் 201* ரன்கள் அடிச்சு, தன்னுடைய காயத்தையும் பொருட்படுத்தாம கடைசி வரை நின்னு போராடினாரு. இந்த நிகழ்வ மேக்ஸ்வெல் மனைவி வினி, வான்கடே மைதானத்தோட பெவிலியன்ல இருந்து, போட்டோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாவுல All the emotions-னு பதிவு பண்ணிருந்தாங்க. இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து தான், கிளென் மேக்ஸ்வெல் தமிழ்நாட்டு மருமகன் அப்படின்னும், தமிழ் பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா, வாழ்க்க பிரகாசமாகிடும்னு பல தமிழ் பெண்கள் பதிவு செஞ்சு ட்ரெண்ட் பண்ணினாங்க.

நம்ம தமிழ்நாட்டு மருமகன் மேக்ஸ்வெல்லோட ஸ்பெஷலான இன்னிங்ஸ்-ல அவரோட மனைவியோட சப்போர்ட் நிச்சயம் இருந்திருக்கும். அவர் தமிழ்நாட்டோட மருமகனாவே இருந்தாலும் கூட, இந்தியாவோட விளையாடும் போது மட்டும், மேக்ஸ்வெல் அவுட் ஆகனும்னு வேண்டிக்கிற பெண்களும் இன்னும் எக்ஸிஸ்டிங்கா இருக்காங்க அப்படிங்கிறத மறுக்க முடியாது...

Tags :
Advertisement