For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்ளிடோர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு!

07:26 PM Dec 20, 2023 IST | Web Editor
தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி  கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்ளிடோர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு
Advertisement

தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி உள்ளிடோர் தேர்வாகியுள்ளனர். 

Advertisement

சமீபத்தில் நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் 33 வயதான முகமது ஷமி. உலகக்கோப்பைத் தொடரில் மொத்தம் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்முலம், உலகக்கோப்பைத் தொடரில் அதிகபட்ச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற முன்னாள் வீரர் ஜகீர் கானின் சாதனையையும் முகமது ஷமி முறியடித்துள்ளார்.மேலும், இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடர்களில், 4 முறை 5 விக்கெட்டுகள் மற்றும் அதற்கும் அதிகமாக கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் ஷமி தன்வசப்படுத்தியுள்ளார்.

மேலும், செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் தமிழக வீராங்கனையான வைஷாலிக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார். சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் உள்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அர்ஜுனா விருது பெறுபவர்கள்:

ஓஜஸ் பிரவின் தியோடேல் (வில்வித்தை)
அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை)
முரளி ஸ்ரீசங்கர் (தடகளம்)
பருல் சவுத்ரி (தடகளம்)
முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை)
ஆர் வைஷாலி (சதுரங்கம்)
முகமது ஷமி (கிரிக்கெட்)
அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)
திவ்யகிருதி சிங்
திக்ஷா தாகர் (கோல்ஃப்)
கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி)
சுசீலா சானு (ஹாக்கி)
பவன் குமார் (கபடி)
ரிது நேகி (கபடி)
நஸ்ரீன் (கோ-கோ)
பிங்கி ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (ஷூட்டிங்)
ஈஷா சிங் (ஷூட்டிங்)
ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்)
அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)
சுனில் குமார் (மல்யுத்தம்)
ஆன்டிம் (மல்யுத்தம்)
நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு)
ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை)
இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்ற கிரிக்கெட்)
பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)

சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது (ரெகுலர்):

லலித் குமார் (மல்யுத்தம்)
ஆர்.பி.ரமேஷ் (சதுரங்கம்)
மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்)
சிவேந்திர சிங் (ஹாக்கி)
கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகம்ப்)

சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் பிரிவு):
ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்)
பாஸ்கரன் இ (கபடி)
ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்)

வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது:
மஞ்சுஷா கன்வர் (பேட்மிண்டன்)
வினீத் குமார் சர்மா (ஹாக்கி)
கவிதா செல்வராஜ் (கபடி)
மௌலானா அபுல் கலாம்

Tags :
Advertisement