“தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரும் வரவேற்கும் விதத்தில் உள்ளது” - திருமாவளவன் எம்.பி பாராட்டு!
விழுப்புரத்தில் வருகின்ற 16ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அங்கீகார பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்று வருகிறது. அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “தேர்தல் அங்கிகார வெற்றி விழா வருகின்ற 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநில கட்சியாக அங்கிகாரம் பெற்றுள்ளது. விழுப்புரம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெருவிக்கும் விதமாக கூட்டம் நடைபெறவுள்ளது. மார்ச் 16ஆம் தேதி திருவண்ணாமலையில் பெண்கள் சார்பில் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது அனைத்து தரப்பினரும் வரவேற்கும் விதமாக உள்ளது.பெண்களை முன்னேற்ற 20 சதவீத மானியத்தில் தொழிற்கடன் வழங்கும் திட்டம் பாராட்டுக்குறியது. ஐந்து லட்சம் பேருக்கு பட்டா வழங்குவது பாராட்டுக்குறியது.
கடலூர், விழுப்புரத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுகுறியது. விசிகவின் கோரிகையை ஏற்று செய்யூரில் 800 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கவுள்ளது குறித்து முதல்வருக்கு நன்றி சொல்கிறோம்.
பதவி உயர்வு தொடர்பாக இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பு இல்லைஇல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. டாஸ்மாக்கில் ஊழல் முறைகேடு நடந்திருந்தால் அமலாக்கத்துறை அதனை சட்டபூர்வமாக அணுகும், அதனை டாஸ்மாக் நிறுவனம் சட்டப்பூர்வாக எதிர்க்கொள்ளும்.
நாங்குநேரி சம்பவத்தை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பல பட்டியலின இளைஞர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது சாதி அமைப்புகள் தான் காரணம். ரூ என்பது வழக்காமாக பயன்படுத்துவதுதான். புதிதாக ஒன்றும் இல்லை. கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்”
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.