"இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக "ஆபரேஷன் சிந்தூர்" என்று பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
Tamil Nadu stands with the Indian Army against terrorism. With our Army, for our nation. Tamil Nadu stands resolute.#OperationSindoor
— M.K.Stalin (@mkstalin) May 7, 2025
"பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும். நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.