For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு நதிநீர் பிரச்னை : எதிர்க்கட்சியினர் முன்வைத்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகனின் பதில் என்ன?

“தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
03:59 PM Mar 24, 2025 IST | Web Editor
தமிழ்நாடு நதிநீர் பிரச்னை   எதிர்க்கட்சியினர் முன்வைத்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகனின் பதில் என்ன
Advertisement

தமிழ்நாடு சட்டபேரவையில் 2025-26 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. தற்போது துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில், இன்று நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், “பழம் நழுவி பாலில் விழுவது போல,தென் மாநில முதலமைச்சர்கள் எல்லாம் இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்தனர். அவர்களிடம் தமிழ்நாடு நதிநீர் பிரச்னை குறித்து முதலமைச்சர் பேசி இருக்கலாம்” என்றார்.

இவரைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அண்டை மாநில முதலமைச்சர்கள் எல்லாம் நெருக்கமாக இருக்கும் நிலையில், நதிநீர் பிரச்சனைகளுக்கு முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இது மக்கள் நலன் சார்ந்த பிரச்சனை” என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்,

“நீங்கள் முதலமைச்சராக இருக்கும் போது அண்டை மாநில முதலமைச்சர்கள் விரோதியாக இருந்தார்களா?. எத்தனையோ ஆண்டுகளாக பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. அவற்றால் பயனில்லை என்றுதான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம்.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள் என உச்ச நீதிமன்றம் கூறிவிடும். வி.பி.சிங் ஆட்சிக்காலத்தின் போது, பேசிப்பாருங்கள் என கருணாநிதியிடம் அவர் தெரிவித்தார்.

இனி பேச முடியாது என கருணாநிதி கூறியதால்தான், காவிரி தீர்ப்பாயம் நமக்கு கிடைத்தது. மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கையை அவர்கள் தயார் செய்தனர். அதனை காவிரி ஆணையத்திலும் விவாதத்திற்கு முன்வைத்தனர்.

ஆனால், காவிரி ஆணையத்திற்கு மேகதாது குறித்துப் பேச உரிமை இல்லை என்று நாம் கூறியதால்தான், அந்த விவாதம் கைவிடப்பட்ட திட்ட அறிக்கை திரும்ப அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது.

திமுக கொண்டு வந்ததாலேயே தாமிரபரணி - கருமேனியாறு திட்டத்தை அதிமுக அரசு நிறுத்தியது” என தெரிவித்தார்.

Tags :
Advertisement