For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

06:46 AM Mar 01, 2024 IST | Jeni
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
Advertisement

தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 7 லட்சத்து 72 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் மட்டும் 3,300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 3,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் கைப்பேசி எடுத்து வருவதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மத்திய அரசு வரிப்பகிர்வு – தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியும், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடியும் விடுவிப்பு!

தேர்வில் ஆள்மாறாட்டம், பார்த்து எழுதுதல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுதத் தடைவிதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement