For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாளை மறுநாள் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை! 19-ந் தேதி பட்ஜெட் தாக்கல்!

11:01 AM Feb 10, 2024 IST | Web Editor
நாளை மறுநாள் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை  19 ந் தேதி பட்ஜெட் தாக்கல்
Advertisement
2024-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில்,  ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும்.  கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது,  தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும்,  சிலவற்றை சேர்த்தும் வாசித்தார்.

இதனால்,  ஆளுநர் இருக்கும் போதே,  அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது.  அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.  ஏற்கெனவே, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால்,  அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில்,  கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார்.

இந்த  நிலையில் 2024-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் வரும் 12-ந்தேதி தொடங்க உள்ளது.  தொடர்ந்து 19-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

இதையடுத்து 20-ந்தேதி முன்பண மானியக் கோரிக்கையும்,  21-ந்தேதி முன்பணச் செலவின மானியக் கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.  சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சட்டப் பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள திரையின் அகலம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.  50 அங்குலம் அளவில் இருந்த திரைகளின் அகலம்,  இப்போது கூடுதலாக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement