”கொள்ளையடிப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது”- பழனிசாமி விமர்சனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”மக்களை சந்திப்போம் தமிழகத்தை காப்போம்” என்னும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று காரைக்குடியில் மக்களை சந்தித்து பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர்,
“தமிழகத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்தேறி வருகிறது. திமுக கொள்ளையடிக்கவே ஆட்சிக்கு வந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவின் அனைத்தும் ஊழல்களும் மீதும் விசாரணை நடத்தி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்ததால் தான் 1000 ரூபாய் உரிமை தொகையை திமுக கொடுத்தது.
தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிய திமுகவினர் தற்போது வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.குப்பைக்கு கூட வரி உயர்ந்தியுள்ளனர்.பெரிய பெரிய தொழிற்சாலைகள் வெளி மாநிலத்திற்கு செல்வது பற்றி திமுக அரசு கவலை படுவதில்லை. கொள்ளையடிப்பதில் முதன்மை மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. தமிழக முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக இருந்து வருகிறார்.
அதிமுக ஆட்சிக்கு வந்து விட்டால் திமுக அறிவிக்கும் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவார்கள்..? தமிழ்நாட்டு தொழில் அதிபர்களை வெளிநாடு வரவழைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார் முதலமைச்சர்.டாஸ்மாக்கின் மூலமாக 45 கோடி லஞ்சப் பணம் மேலிடம் செல்கிறது. பிரதமரிடம் அதிமுக முறையிட்டதால் தான் விசாயிகளுக்கான சிபில் ஸ்கோரை பிரதமர் ரத்து செய்துள்ளார்”
என்று தெரிவித்துள்ளார்.