Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”உயர்கல்வியில் முதன்மை மாநிலம் தமிழ் நாடு” - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

நாட்டிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழ் நாடு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
09:06 PM Sep 04, 2025 IST | Web Editor
நாட்டிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழ் நாடு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Advertisement

நாட்டிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

”NIRFதரவரிசைப் பட்டியல் 2025 மூலம்  உயர்கல்வி சிறந்த தமிழ்நாடு என மீண்டுமொரு முறை நிரூபணமானது. இந்தியாவின் தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17, தலைசிறந்த 100 கல்லூரிகளில் 33, தலைசிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழங்களில் 10 என இப்பட்டியல் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய  அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய -அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி இது”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
CMStalinHigherEducationlatestNewsNIRFTNnews
Advertisement
Next Article