For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“2026-லும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
06:38 PM Apr 18, 2025 IST | Web Editor
“தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு out of control தான்”   முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில்,

Advertisement

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு!

தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்து இந்த மண்ணைப் பாழாக்கத் துடிக்கும் பா.ஜ.க.வுக்கும், அதற்குத் துணைபோகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சவால் விடுகிறேன்…

எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்து வாருங்கள்!

2026-லும் திமுக ஆட்சிதான்! தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு OUT OF CONTROL-தான்!. தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்”. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Tags :
Advertisement