#TamilNaduInvestmentConclave2024 | முடிவுற்ற திட்ட பணிகள் என்னென்ன?
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் முடிவுற்ற திட்ட பணிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (21.08.2024) ‘தமிழ்நாடு முதலீட்டு மாநாடு- 2024’ நடைபெற்று வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ. 51,157 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் முடிவுற்ற திட்ட பணிகள் குறித்த தகவல்களின் முழு விவரம் வருமாறு:
நிறுவனம் முதலீடு வேலைவாய்ப்பு
1) OMRON Healthcare Manufacturing India ரூ. 128 கோடி 88
2) Hi-P ரூ.312 கோடி 700
3) Motherson Electronic Components ரூ.2,600 கோடி 2,800
4) L&T Innovation Campus ரூ.3,500 கோடி 40,000
5) TVS Indeon (Lucas TVS) ரூ.2,850 கோடி 800
6) Jurojin Developers (House of Hiranandani) ரூ.2,000 கோடி 1,500
7) Renault Nissan Technology
8) Sundram Fasteners ரூ. 1,411 கோடி 1,577
9) ESJAY Pharma ரூ.1,000 கோடி 1,500
10) ENES Textile Mills (Ramraj Cotton) ரூ.1,000 கோடி 7,000
11) Caplin Point ரூ.700 கோடி 1,500
12) WEG Industries (India) ரூ. 650 கோடி 650
13) Milky Mist ரூ.500 கோடி 3,400
14) Gurit Wind ரூ.300 கோடி 300
15) Hibrow Healthcare ரூ. 200 கோடி 300
16) Royal Enfield (Eicher Motors) ரூ.200 கோடி 200
17) Grupo Cosmos ரூ.100 கோடி 300
18) GP Sulphonates ரூ. 100 கோடி 150
19) Motherson Health & Medical Systems ரூ.65 கோடி 203