For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போதை பொருள் விற்பனை மையமாக தமிழ்நாடு மாறிவிட்டது - இபிஎஸ் கண்டனம்!

12:45 PM Mar 12, 2024 IST | Web Editor
போதை பொருள் விற்பனை மையமாக தமிழ்நாடு மாறிவிட்டது    இபிஎஸ் கண்டனம்
Advertisement

தமிழ்நாடு போதை பொருள் விற்பனை மையமாக மாறியுள்ளதாக  சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். 

Advertisement

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.  இந்நிலையில் மார்ச் 9 ஆம் தேதி போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள் : குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதாகக் கூறி அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி,  தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் காமராஜர் சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார்.  இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்,  முன்னாள் எம்எல்ஏ நட்ராஜ்,  அதிமுக அம்மா பேரவை இணைச்செயலாளர் ஜெ. ஜெயவர்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

"தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்து உள்ளது.  இதனை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பல வலியுறுத்தி இருக்கிறேன். ஆனால்,  திமுக அரசு இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால்,  தற்போது தமிழ்நாடு போதை பொருள் விற்பனை மையமாக மாறியுள்ளது.

போதை பொருள் கடத்தல் விவகாரத்தை நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து இன்று இந்த போராட்டம் நடைபெற்றது. போதைப்பொருள் நடமாட்டத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர்.  ஜாபர் சாதிக் நீண்ட காலங்களாக போதைப்பொருள் விற்பனையை செய்தது வந்துள்ளார்.  ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.  தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்தார்.

இதைபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் போதை பொருள் கடத்தில் விவகாரத்தை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கடம்பூரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் காந்தி சிலையிலிருந்து ரயில் நிலையம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.  இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம் பங்கேற்று தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

இதே போல்,  திருச்சி, திருநெல்வேலி,  ராமநாதபுரம்,  தேனி,  கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிமுக சார்பில்   மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்றன.

மேலும்,  புதுச்சேரி,  அண்ணாசாலையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்க தவறிய அரசை கண்டித்து புதுச்சேரி அதிமுக சார்பில்,  மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags :
Advertisement