For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது" - ஆளுநர் ஆர்.என்.ரவி!

03:02 PM Aug 10, 2024 IST | Web Editor
 இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது    ஆளுநர் ஆர் என் ரவி
Advertisement

இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
தெரிவித்தார்.

Advertisement

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி UPSC தேர்வர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

"இளைஞர்கள் உடன் கலந்து உரையாடும் போது உற்சாகமாக உள்ளது. அதுவும் இப்படி சாதனை புரிந்துள்ள இந்த இளைஞர்கள் உடன் உரையாடுவது மிகுந்த
மகிழ்ச்சியாக உள்ளது. Civil servants மிக முக்கிய பங்காற்றி வருகிறார்கள்
அதிக பொறுப்பு கொண்டவர்கள்.  நான் கல்லூரி செல்லும் வரை எங்களுக்கு மின்சார வசதி இல்லை. நெடும் தூரம் நடந்து பள்ளிக்கு செல்வோம்.

நாம் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ அதற்கான வேலைகளை செய்ய வேண்டும்.  முடிவுகளை பற்றி கவலை கொள்ள கூடாது. முழு முயற்சியுடன் நம் வேலையை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்வும், மக்கள் சேவையும் சிவில் சர்வன்ட்களுக்கு கிடையாது. வெற்றிகளை ஜீரணிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
மக்கள் பணியாளர்கள் பிணிகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது.உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

எப்போதும் அறிவு சார்ந்த விஷயங்களை தொடர்ந்து கற்க வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நிதி மேலாண்மை நீங்கள் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. வாழ்க்கை மாரத்தான் அல்ல.நானும் பலருடன் ஓடுகிறேன் என்பது போல எந்த துறை சென்றாலும் நேர மேலாண்மை ஒவ்வொரு நாளும் அவசியம்"

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

Tags :
Advertisement