For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருகள் அறிவிப்பு!

தமிழக அரசு இன்று கலைமாமணி விருகளை அறிவித்துள்ளது.
10:29 AM Sep 24, 2025 IST | Web Editor
தமிழக அரசு இன்று கலைமாமணி விருகளை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருகள் அறிவிப்பு
Advertisement

2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.

தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளது. கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்திட கலைப் பிரிவு வாரியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

மேற்படி வல்லுநர் குழுக்களால் அளிக்கப்பட்ட தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியல் இணைப்பில் கண்டவாறு தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவித்துள்ளது. இந்த கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும். மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருது கலை வித்தகர்கள் பெயர்கள்:

பாரதியார் விருது (இயல்) முனைவர் ந. முருகேச பாண்டியன்

எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ்

பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்

அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்படும் சிறந்த நிறுவனத்திற்கான கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற் கேடயம் பெறுவதற்குரிய கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழு கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த கலை நிறுவனம் - தமிழ் இசைச் சங்கம், (சென்னை ராஜா அண்ணாமலை மன்றம்)

சிறந்த நாடகக் குழு - கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம்.

1. இயல் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுத்தாளர்
2. முனைவர் தி. மு. அப்துல்காதர் இலக்கியப் பேச்சாளர்
3. சு. முத்துகணேசன் சமயச் சொற்பொழிவாளர்
4. இசை ஜெயஸ் வைத்தியநாதன் குரலிசை
5. சாரதா ராகவ் குரலிசை
6. பகலா ராமதாஸ் வயலின்
7. நெய்வேலி ஆர். நாராயணன் மிருதங்கம்
8. செம்பனார்கோயில் எஸ். ஜி. ஆர். எஸ். மோகன்தாஸ் நாதசுரம்
9. சித்துக்காடு டி. ஜி. முருகவேல் நாதசுரம்
10. திருக்கடையூர் டி. ஜி. பாபு தவில்
11. சுசித்ரா பாலசுப்பிரமணியன் கதா காலட்சேபம்
12. நாட்டியம் அமுதா தண்டபாணி பரதநாட்டிய ஆசிரியர்
13. வி. சுப்பிரமணிய பாகவதர் பாகவத மேளா
14. சுவாமிமலை கே. சுரேஷ் பரதநாட்டியக் குரலிசை
15. நாடகம் பொன் சுந்தரேசன் நாடக நடிகர்
16. கவிஞர் இரா. நன்மாறன் நாடக இயக்குநர்
17. சோலை ராஜேந்திரன் நாடகத் தயாரிப்பாளர்
18. திரைப்படம் விக்ரம் பிரபு திரைப்பட நடிகர்
19. ஜெயா வி. சி. குகநாதன் திரைப்பட நடிகை
20. விவேகா திரைப்பட பாடலாசிரியர்
21. டைமண்ட் பாபு திரைப்பட செய்தித் தொடர்பாளர்
22. டி. லட்சுமிகாந்தன் திரைப்பட புகைப்படக் கலைஞர்
23. சின்னத்திரை மெட்டிஒலி காயத்ரி சின்னத்திரை நடிகை
24. இசை நாடகம் என். சத்தியராஜ் இசை நாடக நடிகர்
25. கிராமியக் கலைகள் ந. ரஞ்சிதவேல் பொம்மு தேவராட்டம்
26. மு. கலைவாணன் பொம்மலாட்டம்
27. எம். எஸ். சி. ராதாரவி தப்பாட்டம்
28. கே. பாலு நையாண்டிமேள நாதஸ்வரம்
29. இதர கலைப் பிரிவுகள் ஆர். சாமிநாதன் பண்பாட்டுக் கலை பரப்புனர்
30. கே. லோகநாதன் ஓவியர்

Tags :
Advertisement