‘ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற..’ – ‘அடி அலையே’ பாடலின் BTS வீடியோ வைரல்!
ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் வீடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என வளர்ந்து வந்த அவர் தனுஷின் 3 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மெரினா, எதிர்நீச்சல் என தனது திறமையான மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மதராஸி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, சிவாகார்த்திகேயன் இறுதிச்சுற்று, சூரரை போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கொராவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
5 Million+ views for Adi Alaye from #Parasakthi ❤️🔥
And here's a BTS video from what happened during the making of the love song
A @gvprakash musical 🎶
Sung by @talktodhee and @RSeanRoldan 🎙️Streaming here 🔗- https://t.co/A5c57JHOtC#ParasakthiFromPongal… pic.twitter.com/FmIscB6jOb
— G.V.Prakash Kumar (@gvprakash) November 8, 2025
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜன.14ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘அடி அலையே’ பாடலை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், இப்பாடலின் BTS வீடியோ வெளியாகியுள்ளது.