மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் | மீனவர்கள் கோரிக்கை!
மீன்பாசி குத்தகை ஏலம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கையிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இன்று உலக மீனவர் தினத்தை
ஒட்டி மீனவ பெண்கள் மற்றும் சிஐடியு மீன் தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து
மீனவர் தினத்தை கொண்டாடினர். இதில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் மீனவர்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக கடந்த தேர்தலின் போது
மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதி அளித்ததை இன்னும் நிறைவேற்றவில்லை.
இதையும் படியுங்கள்: பிறந்து 1மாதம் கூட ஆகாத பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்ற தாய்; 4 பேர் கைது!
எனவே உடனடியாக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையிட்டனர். உள்நாட்டு மீனவர்களுக்கு குளங்களில் மீன் பிடிக்கும் மீன்பாசி குத்தகை ஏலம் கடந்த ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விடப்பட்டது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் மீண்டும் மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் என அவர்கள் இந்த கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.