Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.
12:09 PM May 23, 2025 IST | Web Editor
கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.
Advertisement

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப் வழங்கப்படும் என்றும், இதற்காக முதற்கட்டமாக ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

Advertisement

ஒரு மடிக்கணினியின் விலை ரூ. 20,000 என்ற அளவில் தரமான மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இந்நிலையில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும்பொருட்டு அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த ஆண்டு 20 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியுள்ளது.

இந்த லேப்டாப் 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்புத் திறன், 14 அல்லது 15.6 திரை, ப்ளூடூத் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

Tags :
College studentslaptopTamil Nadu GovernmentTender
Advertisement
Next Article