For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மா மதுரை போற்றுவோம்! - "மா மதுரை" விழாவை காணொளி வாயிலாக துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

11:34 AM Aug 08, 2024 IST | Web Editor
மா மதுரை போற்றுவோம்      மா மதுரை  விழாவை காணொளி வாயிலாக துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

மதுரையில் 4 நாட்கள் நடைபெறும் "மா மதுரை விழா" வை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

Advertisement

மதுரையில் இன்று முதல் 11-ம் தேதி வரை 4 நாட்கள் "மா மதுரை விழா " நடைபெறுகிறது. இந்த விழாவில்  தொல்லியல் பயணம், மதுரை கலைத் திருவிழா, இரட்டை அடுக்கு பேருந்து பயணம், பலூன் திருவிழா, உணவு திருவிழா, வானவேடிக்கை நிகழ்ச்சி, கிரிக்கெட், கால்பந்து போட்டி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது.

"மா மதுரை" விழாவை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அதில், தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை. மாபெரும் பண்பாட்டு விழாவாக மதுரை சித்திரை திருவிழா நடைபெறுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது :

"மதுரை மாநகர் பல்வேறு வரலாற்று பெருமையை கொண்டது. இந்தியாவின் மிக பழமையான நகரமாக மதுரை திகழ்கிறது. 2000 ஆண்டு வரலாறு கொண்டது மதுரை. பாண்டிய மன்னன் தலைநகர ஆட்சி செய்த நகரம் மதுரை. தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் மன்னனை கேள்வி கேட்ட மண் மதுரை. நீதியை காக்க தனது உயிரை தந்த மன்னர் ஆட்சி செய்த நகரம் மதுரை. புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இருக்கும் நகரம் மதுரை.

இதையும் படியுங்கள் : வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும்! – ஹரியானா அரசு அறிவிப்பு!

1866-ம் ஆண்டே நகராட்சியான ஊர் மதுரை, சென்னைக்கு அடுத்தபடியாக மாநகராட்சி ஆன ஊர் மதுரை. என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரனி மாநாடு  மதுரையில் தான் நடைபெற்றது. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட இந்திர விழாவைப்போல இந்த விழா நடைபெறும்.  வரலாற்றை போற்றுவோம், வைகையை போற்றுவோம், மதுரையை போற்றுவோம் என விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல் பண்பாட்டு விழாவாக நடத்தப்படுகிறது "

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
Advertisement