For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மத்திய அரசு உதவியுடன் செய்யப்படும் சாலை திட்ட பணிகளில் தமிழ்நாடு முதலிடம்" - மத்திய அமைச்சர் #NitinGadkari பாராட்டு!

01:21 PM Oct 02, 2024 IST | Web Editor
 மத்திய அரசு உதவியுடன் செய்யப்படும் சாலை திட்ட பணிகளில் தமிழ்நாடு முதலிடம்    மத்திய அமைச்சர்  nitingadkari பாராட்டு
Advertisement

மத்திய அரசு நிதியால் சாலை உட்கட்டமைப்பு திட்டப் பணிகளை செயல்படுத்துவதில், நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Advertisement

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு, மற்றும் தமிழ்நாடு அதிகாரிகளுடன் டெல்லியில் செப்.30ம் தேதி மற்றும் அக்.1ம் தேதி ஆகிய இரு தினங்களில் மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. இந்த ஆய்வு கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் அஜய் டாம்டா மற்றும் மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் இணையவுள்ள 1,031 கி.மீ. தூரமுள்ள 35 நெடுஞ்சாலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் நிதின் கட்கரி மதிப்பாய்வு செய்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

"தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 6,809 கி.மீ. இதில் NHAI சாலையின் தூரம் 5,092 கி.மீ. இதில் ரூ.38, 000 கோடி மதிப்பிலான 3,290 கி.மீ. சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ரூ.41,000 கோடி மதிப்பில் 943 கி.மீட்டருக்கு சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், 88 கி.மீ. தூரம் சாலை அமைக்க ரூ.3, 627 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிகழ் நிதியாண்டில், ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் 255 கி.மீ. சாலைத் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. திட்டங்கள் முடிக்கப்படும் நிலையில் தேவையான நிதி ஒதுக்கப்படும். மத்திய அரசு நிதியுதவியில் சாலை உட்கட்டமைப்பு திட்டப் பணிகளை செயல்படுத்துவதில், நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது

இதையும் படியுங்கள் : மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் | #PMK அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2,170 கி.மீ. சாலைப் பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பில் உள்ளது. இந்த திட்டங்களுக்கு சுமார் ரூ.85,000 கோடி செலவாகும். சென்னை, அதைச் சுற்று வட்டாரங்களில் 671 கி.மீட்டரில் 25 சாலைத் திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல், மதுரையைச் சுற்றியும் 360 கி.மீ. தொலைவில் 10 சாலைத் திட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை துறைமுகம் முதல் மதுரவாயில் வரையிலான 21 கி.மீ. தூரத்திற்கு ரூ.5,510 கோடி மதிப்பில் இரட்டை அடுக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ளூர் மக்களின் போக்குவரத்து (முதல் அடுக்கு), வாகனங்கள் மற்றும் துறைமுக கொள்கலன் போன்றவற்றுக்கு தனித் தனி அடுக்குகள் அமைக்கப்பட்டு நகர நெரிசல் குறைக்கப்படுகிறது. பெரிய துறைமுகங்கள், தொழில்துறை மையங்களை இணைக்கவும், நெரிசலைக் குறைக்கவும் தமிழ்நாட்டில் முக்கிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிழக்கு கடற்கரையில் சென்னையை கன்னியாகுமரியுடன் இணைக்க தேசிய நெடுஞ்சாலை 45ஏ-ல் 179 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெறுகிறது. பெங்களூரு - சென்னை விரைவுச் சாலையின் 4 பிரிவுகள் ரூ.6,132 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன"

இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Tags :
Advertisement