For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
08:08 AM Apr 17, 2025 IST | Web Editor
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
Advertisement

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பட்ஜெட்டிற்கு முன்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளன. சட்டமன்ற அலுவல்கள் இன்று பிற்பகலில் நிறைவடைகிறது.

அதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் மு புதிய திட்டங்கள், ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கம், தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நடக்க இருப்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags :
Advertisement