For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு! சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை!

11:14 AM Feb 14, 2024 IST | Web Editor
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர் பி உதயகுமாருக்கு ஒதுக்கீடு  சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை
Advertisement

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (பிப். 12) முதல் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை தொடர்பாக பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் உட்கார்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக எதிர்க்கட்சித் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கையை அளிக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

அதன்படி, நேற்று அது குறித்து பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அதே கோரிக்கையை முன்வைத்தார். அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“அதிமுக சட்டப்பேரவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயகுமாருக்கு இடம் ஒதுக்கி தருவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தொடர்ந்து இந்த அவையில் பேசி வருகிறார். ஆனால், இது சபாநாயகருக்கு உள்ள உரிமை என்று இந்த விவகாரத்தில் பல முறை சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துவிட்டார். இருந்தாலும் இந்த விவகாரத்தில் நான் கேட்டுக்கொள்வது, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை சபாநாயகர் மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யுமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “முதலமைச்சர் பரிந்துரைபடி இந்த கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சி துணை தலைவராக இருக்கும் ஆர்.பி.உதயகுமாருக்கு, எதிர்கட்சி தலைவர் அருகில் இருகை ஒதுக்கப்பட்டது. அதேபோல் ஓ.பன்னீர் செல்வம் இருக்கை இரண்டாவது வரிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement