For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.
07:32 AM Oct 14, 2025 IST | Web Editor
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை
Advertisement

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 14-ம் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இதனையடுத்து, மார்ச் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

Advertisement

மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 6 மாத கால இடைவெளிக்கு பிறகு சட்டசபை இன்று கூடுகிறது.

இதற்கிடையே, சென்னையில் நேற்று நடைபெற்ற சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று (அக்.14) தொடங்கி, வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்போது, மறைந்தவர்களின் புகைப்படங்கள் அங்கு இருக்கும் திரையில் திரையிடப்பட உள்ளது. இது தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக நடக்கும் நிகழ்வாகும்" என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement