For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகளிர் உலகக்கோப்பை | வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

மகளிர் உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
07:09 AM Oct 14, 2025 IST | Web Editor
மகளிர் உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
மகளிர் உலகக்கோப்பை   வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
Advertisement

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 232 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணியில் அதிகபட்சமான ஷோர்னா அக்தர் 51 ரன்களும், ஷர்மின் அக்தர் 50 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

அதிரடியாக ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.3 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன் மூலம் அந்த அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக க்ளோ ட்ரையன் 62 ரன்களும், மாரிசேன் காப் 56 ரன்களும் எடுத்தனர்.

Tags :
Advertisement