Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜஸ்தானில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் - மதுரை வந்தடைந்த முத்துவின் உடலுக்கு ராணுவ உயரதிகாரி உள்ளிட்ட பலர் மரியாதை!

06:47 PM Nov 12, 2024 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் முத்துவின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசு மரியாதை செய்யப்பட்டது.

Advertisement

தேனி மாவட்டம் அல்லி நகரத்தை சேர்ந்த நாகராஜ் - இன்பவள்ளி தம்பதியினரின் மகனான ராணுவ வீரர் முத்து. இவர் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த நவ. 10-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் நடைபெற்ற ராணுவ பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் சிக்கி முத்து படுகாயம் அடைந்துள்ளார்.

உடனடியாக சக ராணுவ வீரர்கள் முத்துவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்து உயிரிழந்தார். ராணுவ வீரர் முத்துவின் உடலை சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் அவரது உடல் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் முத்துவின் உடலுக்கு மதுரை மாவட்டம் சார்பாக அரசு மரியாதை செய்யப்பட்டது. அப்போது, இந்திய ராணுவம் சார்பாக கர்னல் ராஜீவன், மதுரை திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் சீதாராமன், திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் முத்துவின் உடல் தேனி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Tags :
HomageIndian ArmyMaduraiNews7TamilPrivateRajasthanTheni
Advertisement
Next Article