"தமிழ் ரசிகர்கள் திரைக் கலைஞர்களை கொண்டாடும் விதம் பிடித்திருக்கிறது" - ரன்பீர் கபூர் நெகிழ்ச்சி
"தமிழ் ரசிகர்கள் திரைக் கலைஞர்கள் கொண்டாடும் விதம் பிடித்திருக்கிறது" என அனிமல் பட செய்தியாளர் சந்திப்பில் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் ரெட்டி படத்திற்குப் பின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில்
இந்தியில் உருவாகியுள்ள படம் 'அனிமல்'. இப்படத்தை டி சீரியல் மற்றும் சினீ 1
ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும்
இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அனில் கபூர்,
பாபி தியோல், பரினிதி சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்
நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த மாதம் 1ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என
பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதனையொட்டி இன்று சென்னையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ரன்பீர் கபூர்,
ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் பேசிய ரன்பீர் கபூர் தெரிவித்ததாவது..
ஜெயிலர், லியோ, விக்ரம் போன்ற 3 மிகப்பெரிய தமிழ் திரைப்படங்களை இந்தியாவின்
டாப் திரைப்படங்களின் வரிசையில் கொடுத்ததற்கு நன்றி. அனிமல் படத்தின் தமிழ் டப்பிங்கில் தமிழ் ரசிகர்களுக்காக இயக்குனர் சந்தீப் உள்ளிட்ட படக்குழுவினர் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். டிசம்பர் 1ம் தேதி அனிமல் வெளியாகிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த படம் நடிக்கும்போது நானும் அப்பா ஆனேன். படத்தில் உள்ள கேரக்டருக்கும் நிஜ வாழ்க்கையிலும் சற்று விசித்திரமாக இருந்தது. ஆனால் என்னால் ரீல் மற்றும் நிஜ வாழ்க்கையை வேறுபடுத்தி பார்க்க முடிந்தது. நான் பார்த்த இயக்குனர்களிலேயே உண்மையான படம் எடுப்பவர் சந்தீப்.
இந்திப் படங்கள் அதிகம் அம்மா - மகன் சென்டிமென்ட் படங்களாக இருக்கும். சமீபத்தில் கேஜிஎப் கூட அம்மா - மகன் சென்டிமென்ட் படம்தான். இந்த படமும் அப்பா - மகன் சென்டிமென்ட் படம். இயக்குநர் சந்தீப் ஏதோ ஒரு விஷயத்தில் இன்ஸ்பையர் ஆகி இப்படத்தை எடுத்துள்ளார். தான் விரும்பும் ஒருவரை பாதுகாக்க மகன் எந்த எல்லை வரை செல்வான் என்பதே அனிமல் திரைப்படம் கரு.
பல வருடங்களாக தமிழ் ரசிகர்கள் சினிமாவை, இசையை, ஹீரோ, ஹீரோயின்களை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பல வீடியோக்களில் பார்த்திருக்கிறேன். இது எல்லாம் தான் எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது. ரஜினி, கமல், அஜித் , விஜய் இவர்களை திரையில் பார்த்து கொண்டாடுகின்றனர். அவர்களை அளவுக்கு அதிகமாக நேசிக்கின்றனர், சப்போர்ட் செய்கின்றனர். உலகில் எங்கிருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மிகவும் வலுவாக உள்ளனர்.
இந்தியாவில் அப்பா மகன் உறவு என்பது கொஞ்சம் கருத்து வேறுபாடு நிறைந்ததாக
இருக்கும். மரியாதை மற்றும் பயம் கலந்து இருக்கும். இப்படத்தில் ஒரு சண்டைக்
காட்சியில் 500 கிலோ எடையுள்ள வார் மிஷின் பயன்படுத்தியுள்ளோம். அதை ஒருஜினலாக தயாரித்துள்ளனர். அதனை முதல்முறையாக பார்க்கும் போது பயம்வந்துவிட்டது. ” என ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார்.