Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ், அது தான் நம் திமுக அரசு " - அமைச்சர் சேகர்பாபு பேட்டி !

தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் தமிழ் வழி அர்ச்சகர் மூலம் வழிபடலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
08:50 AM Mar 12, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை கிழக்கு திமுக மாவட்டம் சார்பாக எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு கே.பி.பார்க் ஹவுசிங் போர்டு மற்றும் சூளை பகுதிகளில் அன்னம் தரும் அமுதகரங்கள் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Advertisement

அப்போது, "13 போற்றி புத்தகங்கள் தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனை கொண்டு வந்தவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின், அன்னை தமிழ் அர்ச்சனை செய்யக்கூடியவரின் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை காட்சிப் படுத்தியுள்ளோம்.

யார் தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பினாலும் தமிழ் வழி அர்ச்சகர் மூலம் வழிபடலாம். அதே நேரம் சமஸ்கிருதம் மொழி வழிபாட்டுக்கும் நாங்கள் எந்த தடையும் செய்யவில்லை. தேவாரம் என்றாலும், திருவாசகம் என்றாலும் அர்ச்சனை என்றாலும் தமிழ் தான். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அது தான் நம் அரசு. காலை சிற்றுண்டியால் பலர் பலன் பெறுகின்றனர். மக்கள் பணி எங்களை உற்சாகப்படுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ChennaiDMKfoodgovernmentinterviewMayorPriyaMinister SekarBabuprovideTamil
Advertisement
Next Article