For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2023-ம் ஆண்டில் தமிழ் சினிமா - ஒரு சிறப்பு பார்வை!

08:24 AM Dec 31, 2023 IST | Web Editor
2023 ம் ஆண்டில் தமிழ் சினிமா   ஒரு சிறப்பு பார்வை
Advertisement

2023-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட ஏற்றம்-இறக்கங்கள், சாதனை-வேதனை-சோதனைகள் மற்றும் பல்வேறு விவரங்களை காணலாம்...

Advertisement

பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை அள்ளி குவித்த படங்கள்

  • நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.605 கோடியை அள்ளி குவித்தது.
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் அக்டோபர் 19-ம் தேதி வெளியான ‘லியோ’ திரைப்படம் ரூ.593 கோடி வசூலை அள்ளி குவித்தது.
  • மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ரூ.343 கோடி வசூலை அள்ளி குவித்தது.
  • ஜனவரி 11-ம் தேதி வெளியான ‘வாரிசு’ திரைப்படம் ரூ.302 கோடி வசூலை அள்ளி குவித்தது. இப்படத்தில் விஜய், ராஷ்மிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
  • அதேபோல் ஜனவரி 11-ம் தேதி வெளியான ‘துணிவு’ திரைப்படம் ரூ.201 கோடி வசூலை அள்ளி குவித்தது. இப்படத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடித்துள்ளனர்.

2023ல் மறைந்த பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல நல்ல விஷயங்கள் நிகழ்ந்திருந்தாலும், பிரபலங்களின் எதிர்பாராத மரணங்களும் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

டிபி.கஜேந்திரன்

இயக்குநர், நடிகர் டிபி கஜேந்திரன் தன்னுடைய 68வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக பிப்ரவரி 5-ம் தேதி காலமானார். தனது நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்ததற்காக நடிகராகப் பெயர் பெற்றவர் கஜேந்திரன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வகுப்புத் தோழரான டிபி.கஜேந்திரன், எந்த இடத்திலும் அதை பெரிதாக பதிவு செய்ததேயில்லை. பட்ஜெட் படங்களை ஹிட் ஆக்குவதில் பெரும் வித்தகர் டிபி கஜேந்திரன்.

மயில்சாமி

நடிகர் மயில்சாமி, திடீரென மாரடைப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி மறைந்தார். 57 வயதான இவர் நடிப்பையும் தாண்டி, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான, பொதுமக்களுக்கு தொடர்ந்து உதவிகளைச் செய்து வந்தார்.

மனோபாலா

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக வலம் வந்த மனோபாலா, தனது நடிப்பின் மூலமாக இன்றும் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார். 69 வயதான நடிகர் மனோபாலா, கடந்த மே மாதம் 3-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவர் நடிப்பில் கடைசியாக வர இருக்கும் படம் 'இந்தியன்2'. இதற்கு முன்பு இந்தப் படத்தில் நடித்த விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்டப் பிரபலங்கள காலமாக, அவர்கள் வரிசையில் மனோபாலாவும் இணைந்தது பெரும் சோகம்.

சரத் பாபு

’சட்டம்’, ‘முத்து’, ‘அண்ணாமலை’ என தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக ‘போர் தொழில்’ படத்தில் நடித்தார். உடல் உறுப்புகள் செயலிழந்து போனதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, சிகிச்சை பலனின்றி கடந்த மே 22ஆம் தேதி உயிரிழந்தார்.

மாரிமுத்து

இயக்குநர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வந்தவர் மாரிமுத்து. இவருக்கு ‘எதிர்நீச்சல்’ சீரியல் மிகப்பெரிய புகழைத் தேடித் தந்த நிலையில், ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேச சென்ற போது கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார்.

போண்டா மணி

2 கிட்னிகளையும் இழந்து தொடர் சிகிச்சையில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென மயக்கம் அடைந்ததில் சுயநினைவை இழந்த போண்டா மணி டிசம்பர் 23-ம் தேதி இரவு 11 மணிக்கு காலமானார்.

விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் மற்றும் முன்னணி நடிகர் ‘விஜயகாந்த்’ டிச. 28-ம் தேதி இயற்கை எய்தினார். இவரது மறைவு தமிழ் திரையுலகிலும், ரசிகர்களிடையே மற்றும் தமிழ் மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

தமிழிருந்து பாலிவுட்டுக்கு சென்ற பிரபலங்கள்

  • தென்னிந்தியாவில் சிறகடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் முதன் முறையாக ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
  • 4 ஆண்டுகள் பிரேக் கொடுத்து மீண்டும் கலம் இறங்கிய அட்லீ பான் இந்தியா படமாக ஜவான் படத்தை இயக்கி உள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற பிரபலங்கள்

  • சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை "THE WHALE" திரைப்படத்திற்காக பிரண்டன் ஃப்ரேசர் பெற்றுக் கொண்டார்.
  • சிறந்த நடிகைக்கான விருது 'Everything Everywhere All At Once'படத்தில் நடித்த மிஷ்ஷெல் யோ-விற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையையும் இவர் படைத்தார்.
  • இதேபோல் சிறந்த இயக்குனருக்கான விருதும் 'Everything Everywhere All At Once'படத்தை இயக்கிய டானியல் குவான் மற்றும் டானியல் ஸ்கினேர்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இத்திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய விருதுகளை தட்டிச்சென்றது.

சிறந்த ஆவண குறும்படம்

இந்தியாவின் கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற குறும்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. இப்படம் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஒரிஜினல் பாடல்

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருக்கும் நாட்டு நாட்டு பாடல் வெற்றி பெற்றது.

தாதா சாகேப் விருது

2023-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். இவர் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர். தமிழில் 1955-ம் ஆண்டு வெளியான காலம் மாறிப்போச்சு படத்தில் குரூப் டான்ஸராகவும், 1956-ம் ஆண்டு வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருந்தார். அதன்பிறகு பாலிவுட்டில் செட்டிலான வஹீதா ரஹ்மான், கிட்டதட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் பாலிவுட்டில் நடித்துள்ளார். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

தேசிய விருது
  • இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ திரைப்படத்திற்கும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பார்த்திபன் இயக்கத்தில் அவர் நடிப்பிலே வெளியான ‘இரவின் நிழல்’ படத்தில் மாயவா என்கிற பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த பின்னணி பாடகராக கால பைரவா, சிறந்த இசையமைப்பாளராக ‘புஷ்பா’ படத்துக்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத், சிறந்த பின்னணி இசையமைப்பாளராக ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு இசையமைத்த கீரவாணி ஆகியோர் தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது. 
  • கருவறை’ என்ற ஆவணப்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொண்டார்.
  • திரைப்படமல்லாத Non Feature படங்களின் பிரிவில் இயக்குநர் பி.லெனினின் ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படத்துக்கு சிறந்த கல்வி திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டது.

யூடியூபில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

லியோ, டாடா, பேபி, ஜெயிலர், குஷி, மார்க் ஆண்டனி, விடுதலை, மாமன்னன், குட் நைட் உள்ளிட்ட படங்கள் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன.

அதிக படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்கள்

2023ம் ஆண்டில் அதிகபடியான தமிழ் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களின் பட்டியலில் சாம் சிஎஸ் முதல் இடமும் ஜிவி பிரகாஷ் குமார் 2-ம் இடமும் பிடித்துள்ளார்.

சாம் சிஸ்

ரன் பேபி ரன், பாகசூரன், தக்ஸ், அகிலன்,கொண்றாள் பாவம, கோஸ்டி, ருத்ரன் ,திருவின் குரல், தண்டட்டி, சூர்பனகை, தமிழ் குடிமகன், ரெட் சாண்டில் வுட், தி ரோடு, ரெய்டு, பார்க்கிங் உள்ளிட்ட 15 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார்

வாத்தி, ருத்ரன், மார்டன் லவ் சென்னை, பூ, காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம், அநீதி
கருமேகங்கள் கலைகின்றன, மார்க் ஆண்டனி, ஜப்பான் உள்ளிட்ட 9 படங்களுக்கு இசையமைத்து 2ம் இடம் பிடித்துள்ளார்.

ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்கள்

  • விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில், மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குட் நைட்’ திரைப்படம்.
  • அசோக் செல்வன், சரத் குமார் நடிப்பில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம்.
  • சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ திரைப்படம்.
  • பார்க்கிங், ஜோ, டிடி ரிட்டர்ன்ஸ், இருகப்பற்று ஆகிய படங்களும் இந்த ஆண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இந்த ஆண்டு கவனம் ஈர்த்த ‘பான் இந்தியா’ படங்கள்

  • டிசம்பர் 21-ம் தேதி பிராபாஸ் நடிப்பில் வெளியான 'சலார்'
  • ஜூன் 16-ம் தேதி பிரபாஸ் நடிப்பில் 'ஆதிபுருஷ்'
  • ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படம்
  • ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம் 
  • விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம்

இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த 3 இந்திய படங்கள்

  • 3வது இடத்தில் ‘அனிமல்’ திரைப்படம் (836.1 கோடி)
  • 2வது இடத்தில் ‘பதான்’ திரைப்படம் (1050.8 கோடி)
  • முதல் இடத்தில் ‘ஜவான்’ திரைப்படம் (1152 கோடி) உள்ளது.

டாப் ஹீரோக்களின் படங்கள்

அஜித் நடிப்பில் ‘துணிவு’, விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் ‘லியோ’, ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’, சிம்பு நடிப்பில் ‘பத்து தல’, சூரி நடிப்பில் ’விடுதலை’, விக்ரம் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, நாகசைத்தான்யா நடிப்பில் ‘கஸ்டடி’, தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’, ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’, கார்த்தி நடிப்பில் ‘ஜப்பான்’, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு டாப் ஹீரோக்களின் படங்களாக வெளியாகி உள்ளது.

டாப் நடிகைகள் படங்கள்

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் Farhana, The Great Indian Kitchen, அன்னபூரணி, The Road, ரெஜினா உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு அதிகபடியாக நடித்த தமிழ் நடிகைகள்

The Great Indian Kitchen, பர்ஹானா, ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, தீரா காதல், புலிமடா என்ற மலையாள படமும் நடித்துள்ளார். இந்த ஆண்டு மொத்தமாக 6 படங்கள் நடித்து முதலிடத்தில் உள்ளார். ஆர்டிஎக்ஸ், வாலாட்டி என்ற மலையாள படங்களிலும், 800, நாடு, ரத்தம், சந்திரமுகி 2 என 6 படங்களில் நடித்து முதலிடத்தில் உள்ளார் மகிமா நம்பியார். ருத்ரன், அகிலன், பொம்மை, பத்துதல, கல்யாண காமநீயும் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இந்த ஆண்டு மொத்தமாக 5 படங்கள் நடித்து 2வது இடத்தில் உள்ளார்.

புது முயற்சியில் உள்ள படங்கள்

ஆசியாவின் முதல் ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’ படம் என்கிற பெருமையுடன் வெளியானது ‘பிகினிங்’. ஒரே திரையில், இரண்டு கதைகள் என்கிற ஐடியா, இந்த எளிமையான கதைக்குச் சரியாகப் பொருந்தியிருந்தது. 2 சம்பவங்கள் இறுதியில் ஒரே இடத்தில் முடிவதுதான் கதை. தெளிவான திரை எழுத்தால் கையாண்டிருப்பார் இயக்குநர் ஜெகன் விஜயா.

2023 திருமணமான பிரபலங்கள்

  • நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனுக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
  • மார்க் ஆண்டனி இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் - நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது.
  • நடிகர் கிங்ஸ்லீ - நடிகை சங்கீதாவுக்கு திருமணம் நடைபெற்றது.
  • ஜெகன் தேசாய் - நடிகை அமலா பால் திருமணம் நடைபெற்றது.
  • நடிகர் கவின் - மோனிகா திருமணம்.
  • ரோஹித் - கார்த்திகா திருமணம் கேரளாவில் நடைபெற்றது.

OTT-ல் வெற்றி பெற்ற வெப் சீரிஸ்

  • அதர்வா நடிப்பில் வெளியான ‘மத்தகம்’
  • அபி நக்ஷத்ரா நடிப்பில் வெளியான ‘அயலி’
  • வானி போஜன் நடிப்பில் வெளியான ‘செங்களம்’ தமிழில் வெளியான வெப் சீரிஸின் பட்டியலில் வெற்றி பெற்றுள்ளன.       
Tags :
Advertisement