மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி 6 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாகும் என்றும் அந்தமான் அருகே உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் (நவ.27 ஆம் தேதி) புயலாக உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி ஆகிய 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.