டி20 உலகக் கோப்பை - இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது அமெரிக்கா!
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு 111 ரன்களை அமெரிக்கா அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இதுவரை 22 லீக் போட்டியில் முடிந்துவிட்ட போதிலும் எந்த அணியும் சூப்பர் 8 சுற்றை இன்னும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா அணிகள் இன்று நியூயார்க்கில் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
இதையும் படியுங்கள் : விரைவில் கான்ஜூரிங் கண்ணப்பன் 2-ஆம் பாகம்! – படக்குழு அறிவிப்பு!
அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக ஸ்டீபன் டைலர் களமிறங்கினார். ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கி விளையாடிய கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அடுத்த களமிறங்கிய ஸ்டீபன் டைலர் 24 பந்துகளில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் 27 ரன்களில் அவுட்டாகினர். இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.
இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியுள்ளது.