For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி20 உலகக் கோப்பை : ஸ்காட்லாந்து அணியின் ஜெர்சியில் இடம்பெற்ற கர்நாடக அரசின் நந்தினி பால் விளம்பரம்!

02:41 PM May 19, 2024 IST | Web Editor
டி20 உலகக் கோப்பை   ஸ்காட்லாந்து அணியின் ஜெர்சியில் இடம்பெற்ற கர்நாடக அரசின் நந்தினி பால் விளம்பரம்
Advertisement

டி20 உலகக் கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணியின் ஜெர்சியில் கர்நாடக அரசின் நந்தினி பால் விளம்பரம் பொறிக்கப்பட்டுள்ளது.

Advertisement

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்று விளையாடுகின்றன.

டி20 உலகக் கோப்பைக்கான அணிகள் மற்றும் அணியின் சீருடையை (ஜெர்சி) ஒவ்வொரு அணிகளும் அறிவித்து வருகின்றன. சமீபத்தில் நீலத்துடன் காவி நிறம் இடம்பெற்ற புதிய அறிமுகம் செய்தது.  இந்த நிலையில், ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் சீருடையில் கர்நாடகத்தின் 'நந்தினி' பால் நிறுவன குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது.

பக்கத்து மாநிலமான கர்நாடக மாநில அரசின் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான நந்தினி, வெளிநாடுகளிலும் தங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவிகளை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் கால்பதித்துள்ள நந்தினி நிறுவனம், அந்நாட்டின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அணி விளம்பரதாரராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்காட்லாந்து அணி அறிமுகம் செய்துள்ள தங்களது அணியின் சீருடையில் நந்தினி பால் விளம்பரம் இடம்பெற்றுள்ளது.

Tags :
Advertisement