டி20 உலகக்கோப்பை - ரோகித் ஷர்மாவின் அதிரடியால் ஆஸ்திரேலியாவுக்கு 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை குவித்துள்ளது இந்தியா.
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இதுவரை குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. குரூப் I-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 4 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பில் உள்ளன.
இந்நிலையில் இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் ஆஸ்திரேலியா அணி இருக்கிறது. இந்திய அணி வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு சென்றுவிடலாம். ஆஸ்திரேலியா அணி வெற்றியுடன் கூடுதல் ரன்ரேட்டும் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசம் அணிக்கு எதிராக நாளை காலை விளையாட இருக்கிறது. அப்போட்டியில் வெற்றி பெற்றாலே அந்த அணியால் உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட முடியும். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 51வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 92 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜோஷ் ஹேசல்வுட் 1 விக்கெட்டினை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி இலக்காக 206 ரன்களை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.