டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி : INDvsSA - டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு! அடுத்தடுத்து விக்கெட் இழப்பால் தடுமாற்றம்!
டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
டி20 உலகக் கோப்பைத் தொடர் கடந்த ஜூன் 2ம் தேதி மொத்தமாக 20 அணிகளுடன் தொடங்கியது. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள் : கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.
இதுவரை டி20 உலகக் கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதியதில்லை. 2014ஆம் ஆண்டு டி20 அரையிறுதியில் இந்திய அணியுடன் ஒருமுறை மோதிய தென்னாப்பிரிக்கா அதில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கேட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை இந்திய அணி சேர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோகித், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கோலியும், அக்சர் படேலும் களத்தில் உள்ளனர்.