For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டி20 உலகக் கோப்பை: சூப்பர் ஓவரில் ஓமன் அணியை வீழ்த்தி நமீபியா அணி த்ரில் வெற்றி!

11:09 AM Jun 03, 2024 IST | Web Editor
டி20 உலகக் கோப்பை  சூப்பர் ஓவரில் ஓமன் அணியை வீழ்த்தி  நமீபியா அணி த்ரில் வெற்றி
Advertisement

டி20 உலகக் கோப்பை தொடரில் ஓமன் அணியை வீழ்த்தி நமீபியா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisement

20 அணிகள் பங்கேற்கும் 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நேற்று முதல் தொடங்கி வரும் 29ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் ஓமன் அணியும் நமீபியா அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஓமன் அணி பேட்டிங் செய்தது. இந்நிலையில், நமீபியா அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 109 ரனகள் எடுத்து ஆல் ஆவுட் ஆனது.

இதனையடுத்து, 110 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்கியது. நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர்களில் நமீபியா அணி 109 ரன்கள் அடித்து ஆட்டத்தை சமனில் முடித்தது.

இதையும் படியுங்கள் : பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்! : வழிகாட்டுதல் வெளியீடு

இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஓமன் தரப்பில் சூப்பர் ஓவரை பிலால் கான் வீசினார். அதனை எதிர்கொண்ட நமீபியா அதிரடியாக விளையாடி ஒரு சிக்ஸ் 3 பவுண்டரிகள் உட்பட 21 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 22 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற இந்த சூப்பர் ஓவரில் ஓமன் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா அணி அபார வெற்றி பெற்றது.

Tags :
Advertisement