ENG vs IND | இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. முதலாவதாக டி20 தொடரும், அடுத்ததாக ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது. இந்த தொடர் வருகிற 22-ந் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
இதையும் படியுங்கள் : “கல்லூரும் காத்து என் மேல…” – வெளியானது #VeeraDheeraSooran படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
இந்த போட்டிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கும். இதன் காரணமாக போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மீண்டும் ஜெய்ஸ்வால் இடம் பிடித்துள்ளார்.
இந்த தொடரில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சாம்சன், ஜெய்ஸ்வால், திலக், நிதிஷ் ரெட்டி, சமி, அர்ஷ்தீப், ஹர்ஷித், ஜூரல், ரிங்கு, ஹர்திக், அக்சர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.