Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#INDvsBAN | இந்திய அணியின் சவாலை சமாளிக்குமா வங்கதேச அணி? இன்று 2வது டி20 கிரிக்கெட் போட்டி!

07:42 AM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

Advertisement

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்தில், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் குவாலியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் இன்று ( அக்- 9ம்தேதி) நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள் : அமிதாப்பச்சன் #Rajinikanth குறித்து குட்டி ஸ்டோரி சொன்ன இயக்குநர் ஞானவேல்!

வங்கதேச அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும். இரு அணிகளும் இன்று மோதுவது 16-வது டி20 ஆட்டமாகும். இதுவரை நடைபெற்ற 15 போட்டியில் இந்தியா 14-ல், வங்கதேசம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன.

Tags :
BangladeshDelhiIndiaINDVsBANNews7Tamilnews7TamilUpdatesT20
Advertisement
Next Article