For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Syria கார் குண்டுவெடிப்பு | உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

சிரியாவில் குண்டு வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
06:24 AM Feb 04, 2025 IST | Web Editor
 syria கார் குண்டுவெடிப்பு   உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு
Advertisement

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நேற்று மதியம் (பிப்.3) விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வானத்தின் அருகே நின்றுகொண்டிருந்த வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் திடீரென வெடித்து சிதறியது. அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 15 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பினர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

இதனால், சிரியா கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிரியாவில் குண்டு வெடித்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement