Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிட்னி தேவாலய கத்திக்குத்து சம்பவம் - சிறுவன் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

05:29 PM Jun 14, 2024 IST | Web Editor
Advertisement

சிட்னி தேவாலயத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட சிறுவன் மீதான வழக்கு ஜூலை 26-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியின் மேற்கு நகரமான வேக்லியில் (Wakeley), கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் (Christ The Good Shepherd) பிரார்த்தனைக் கூட்டத்தின்போது 16 வயது சிறுவன் பாதிரியார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலின் தடுக்க வந்த தந்தை என பலர் அந்த சிறுவனால் தாக்கப்பட்டனர்.

தேவாலயத்திற்கு வெளியே கலவரம் செய்த குற்றங்களுக்காக 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வீடியோவில் பதிவாகியிருந்த மற்றவர்கள் தேடப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்தக் கலவரத்தில் 51 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தும், மற்றும் 104 காவல்துறை வாகனங்களும் சேதமடைந்திருந்தன.

அந்த தாக்குதல் நடத்திய சிறுவனை கைது செய்து இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில், ஆதாரங்களை திரட்ட கால அவகாசம் வேண்டும் என வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஜூலை 26-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Tags :
Assyrian churchPoliceSydneyTerrorism
Advertisement
Next Article