சுவாமி விவேகானந்தர் 162-வது பிறந்தநாள் - பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி !
நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று (ஜன.12 ஆம் தேதி) தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விவேகானந்தர் இளைஞர்களுக்கு ஒரு நித்திய உத்வேகம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, "1863 ல் பிறந்த சுவாமி விவேகானந்தர் புகழ்பெற்ற ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார். வேதாந்தம் மற்றும் இந்து தத்துவத்தின் பிற அம்சங்கள் குறித்த அவரது பணிகள் அதிகம் மதிப்புமிக்கவை.
இளைஞர்களுக்கு ஒரு நித்திய உத்வேகமான அவர், இளைஞர்களின் மனங்களில் ஆர்வத்தையும் நோக்கத்தையும் தொடர்ந்து தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியா என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.